இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் விளம்பரம்!

ஜூன் 11, 2019 369

லண்டன் (11 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒட்டி பாகிஸ்தான் டிவியில் வெளியாகியுள்ள விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நநடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானை வருகின்ற 16 – ஆம் தேதி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் இந்தியா சந்திக்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் டிவி ஒன்று நிறவெறி விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் ஜாஸ் டிவி ஒளிபரப்பி வருகிறது. இதற்காக முன்னோட்டமாக அந்த டிவி விளமபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு நபர் விமானி அபிநந்தனைப் போலவே ‘ஹேண்டில்பார் வடிவ’ மீசையுடன சித்தரிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் கருப்பு நிறத்தில் இருப்பவர் போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் உடை நிறமான நீல நிற உடை அணிவிக்கப்பட்டுள்ளது. கையில் டீ கப்புடன் இருக்கும் அவரிடம், இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கு அவர் அபிநந்தனின் புகழ்பெற்ற பதிலான “I’m sorry, I am not supposed to tell you this.” என்பதையே பதிலாக அழைக்கிறார்.

இறுதியில் அவரை போகச் சொல்லும் போது, அவர்கள் கிண்டல் செய்வதுடன் விளம்பரம் முடிவடைகிறது.

விங் மாஸ்டர் அபி நந்தனை கேலி செய்யும் வகையில் வெள்யிடப்பட்டுள்ள இந்த விளம்பரம், இந்தியர்களை கொதிப்படையச் செய்துள்ளது. கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கிரிக்கெட்டில் அரசியலை புகுத்தாதீர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு வீரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...