பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க இம்ரான் கான் அனுமதி!

ஜூன் 12, 2019 445

இஸ்லாமாபாத் (12 ஜூன் 2019): பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க பாக் பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நாளை (13–ந்தேதி) தொடங்குகிறது. நாளை மறுதினம் (14–ந்தேதி) முடிகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

இதற்காக பாகிஸ்தான் வழியாக செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் இம்ரான்கான் அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதைப் பரிசீலித்த இம்ரான்கான் அரசு, மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதை பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் நேற்று உறுதி செய்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...