கோவிலுக்கு சென்ற தலித் இளைஞரை நிர்வாணமாக்கி சித்ரவதை!

ஜூன் 12, 2019 408

பெங்களூரு (12 ஜூன் 2019): கர்நாடக மாநிலத்தில் கோவிலுக்கு சென்ற தலித் இளைஞர் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப் பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐஏஎஸ் தேர்வெழுத மைசூருக்கு சென்றுள்ளார். அங்கு அங்கிருந்து திரும்பும் வழியில் , அவரது இருசக்கர வாகனம் பழுதாகியுள்ளது. இதனால் அந்த இளைஞர் அருகில் இருந்த கோவிலுக்குள் சென்றுள்ளார்.

அங்கே அவரைக் கண்ட கோவில் பூசாரி மற்றும் சிலர் அந்த இளைஞரை தாக்கி நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பூசாரியையும் அவரது மகனையும் கைது செய்தனர். இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...