மதரஸாக்களில் கோட்சேவோ, பிரக்யாசிங்கோ உருவாகவில்லை: மத்திய அரசுக்கு அசாம்கான் பொளேர் பதில்!

ஜூன் 12, 2019 515

புதுடெல்லி (12 ஜூன் 2019): மதரஸாக்களில் கோட்சேக்களையோ, பிரக்யா சிங் தாகூர் போன்றவர்களையோ உருவாக்குவதில்லை என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் தெரிவித்துள்ளார்.

மதரஸாக்களில் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள அசாம்கான், "மதரஸாக்களில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே போன்றோ அல்லது மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியும், பாஜக எம்பியுமான பிரக்யா சிங் தாகூர் போன்ற பயங்கரவாதிகளையோ உருவாக்குவதில்லை, மாறாக இஸ்லாமிய கல்வி மிக்க கவனத்துடன் கற்பிக்கின்றன. அதேபோல ஆங்கிலம், இந்தி, கணிதம், அறிவியல் உள்ளிட்டவைகளும் கற்பிக்கப் படுகின்றன.

உண்மையில் பிரதமர் மோடி மதரஸாக்களுக்கு உதவுவதாக இருந்தால், மதரஸாக்களுக்கு கட்டிடங்களை கட்டிக் கொடுக்கட்டும், தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கட்டும்,மேலும் சத்துள்ள உணவுகளை வழங்கட்டும். இதுதான் மதரஸாக்களுக்கு தேவை."என்று தெரிவித்துள்ளார்.

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...