முதன் முதலாக இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா

ஜூன் 13, 2019 309

புதுடெல்லி (13 ஜூன் 2019): ஐநா நடத்திய வாக்கெடுப்பில் முதல்முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷாகீத் என்ற அமைப்பை ஐ.நாவில் உறுப்பினராக்கலாமா? கூடாதா? என்ற வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

கடந்த 6-ம் தேதியே, ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் இந்தியா இஸ்ரேலுக்கு வாக்களித்தமைக்கு நன்றி என இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ் ட்விட்டரில் பதிவிட்ட பிறகுதான் இந்த ஆதரவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாஜக அல்லாத ஆட்சிக் காலங்களில் பாலஸ்தீனத்தை ஆதரித்து வந்த இந்தியா தற்போது இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...