முத்தலாக் சட்ட சோதாவுக்கு நிதிஷ் குமார் கட்சி எதிர்ப்பு!

ஜூன் 13, 2019 389

பாட்னா (13 ஜூன் 2019): முத்தலாக் சட்ட மசோதாவை ராஜ்ய சபாவில் நிதிஷ் குமார் கட்சி எதிர்க்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ராஜ்யசாபாவில் நிதிஷ் குமார் கட்சி முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்க்கும் என்று அக்கட்சியின் பீகார் மாநில அமைச்சர் ஷயாம் ரஜ்ஜாக் தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார் முத்தலாக் மற்றும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் பேசியிருந்தார். மேலும் பாபர் மசூதி மற்றும் ராமர் கோவில் விவகாரத்தை நீதிமன்றம் அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...