நடு வானில் வெடித்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர்!

ஜூன் 13, 2019 472

ஜெய்ப்பூர் (13 ஜுன் 2019): துபாயிலிருந்து ராஜஸ்தான் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் நடு வானில் வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

துபாயிலிருந்து 186 பயணிகளுடன் ராஜஸ்தான் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென நடுவானில் விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. இதனால் விமானம் லேசாக குலுங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில் அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. டயர் வெடித்திருந்த நிலையிலும் விமானத்தை சாமர்த்தியமாக விமானி தரையிறக்கியதால் 186 பயணிகல் மற்றும் 6 விமான பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இறக்கி அழைத்துச் சென்றனர். அதிக எடையை சுமந்து கொண்டு விமானம் புறப்பட்டதால் அழுத்தம் காரணமாக விமானத்தின் டயர் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...