நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு!

ஜூன் 13, 2019 405

பாட்னா (13 ஜூன் 2019): பீகாரில் சர்க்கரை அளவு குறைந்ததால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

முசாபர்பூரில் உள்ள கெஜ்ரிவால் குழந்தைகள் மருத்துவமனையில் மொத்தம் 179 பேர் ஏ.இ.எஸ். வைரஸ் பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தத்தில் சர்க்கரை குறைவு, அம்மை நோய் உள்ளிட்டவைகள் சேர்ந்தது ஏ.இ.எஸ். எனப்படும் Acute Encephalitis Syndrome (AES) பாதிப்பு ஆகும்.

அதிக வெயில், வெப்பம், மழையின்மை காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குழந்தைகளின் உடலில் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நான்கு நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மேலும் 10 நாட்களில் 53 குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளன.

பீகாரில் குழந்தைகளை சூரிய வெப்பத்தில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் சர்க்கரை மற்றும் உப்பு கலந்த குடிநீரை வழங்குமாறும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...