இம்ரான் கானுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஜூன் 15, 2019 447

பிஷ்கெக் (14 ஜூன் 2019): கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாக்., பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார்.

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் ( ஜூன் 15) நடக்க உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க இன்று டில்லியிலிருந்து பிஷ்கெக் நகருக்கு சென்றார். அங்கு சீன மற்றும் ரஷ்ய அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் இன்று பல நாட்டு தலைவர்களும் இருக்கக்கூடிய அரங்கில் மோடியும், இம்ரான் கானும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டது. அப்போது இம்ரான் கானை பார்த்து, தனது வழக்கமான புன்னகையை உதிர்த்தார் மோடி, பதிலுக்கு இம்ரான் கானும் புன்னகைத்துள்ளார்.. இந்தச் சந்திப்பு நடைபெற்றதை, அதிகாரிகள் வட்டம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக மே 26-ஆம் தேதி மோடியை தொலைபேசியில் அழைத்த, இம்ரான் கான், இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பல்வேறு விஷயங்களை விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்தார். இதேபோல கடிதம் மூலமாகவும் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர், இந்திய பிரதமர், மோடியை அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...