பீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி அதிகரிப்பு!

ஜூன் 15, 2019 337

பாட்னா (15 ஜூன் 2019): பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகிறன. தற்போது பலி எண்ணீக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பால் 117 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

‘ஒக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் ஒக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக் காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...