காதலிக்க மறுத்த பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் எரித்துக் கொலை!

ஜூன் 16, 2019 354

ஆழப்புலா (16 ஜூன் 2019): கேரள மாநிலம் ஆழப்புலாவில் பெண் போலீஸ் ஒருவர் காதலிக்க மறுத்ததால சக போலீஸ்காரர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆழப்புலாவில் வள்ளிகுன்னம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் சவுமியா (34).இவருக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார்.

இந்நிலையில் பெண் காவலர் சவுமியா கடந்த சனிக்கிழமை அன்று பணி முடிந்து தன் வீட்டுகுச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வழியில் காரில் வந்த போக்குவரத்து போலிஸ்காரர் அஜாஸ் என்பவர், சவுமியாவின் மோட்டார் வாகனத்தை இடித்து கீழே தள்ளினார். பின்னர் சுதாரித்த சவுமியா அவரிடமிருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அவரை துரத்திப்பிடித்த அஜாஸ் , சவுமியாவை கடுமையாகத் தாக்கினார். இதில் காயம் ஏற்பட்டு சவுமியா கீழே விழுந்தார்.

இதையடுத்து சவுமியாவின் மீதுபெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்தார். இதில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சவுமியா பரிதாபமாக இறந்தார். அஜாஸ் மீதும் தீ பற்றியதால் அஜாஸ் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

விசாரணையில் அஜாஸ் சவுமியாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், சவுமியா அஜாஸின் காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்த அஜாஸ் சவுமியாவை எரித்துக் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளானர். மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...