மோட்டோர் சைக்கிள் வாங்க வேண்டும் என்றால் இதையும் வாங்க வேண்டும்!

ஜூன் 17, 2019 207

போபால் (17 ஜூன் 2019): இரண்டு ஹெல்மேட் வாங்காவிட்டால் இனி இரு சக்கர வாகனம் பதிவு செய்ய முடியாது என்று மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டுநர் மட்டும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் என இருவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இரண்டு ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி வாகனப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

அப்படி ரசீதுகளை காண்பிக்காமல் இருந்தால் கட்டாயம் அந்த வாகனத்தை பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் ஸ்ரீவத்சவா கூறினார்.

மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி Bureau of Indian Standards (BIS) விதிகளின்படி தயாரிக்கப்பட்ட, சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்களை மட்டுமே பயன்படுத்த வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...