அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் சுட்டுக் கொலை!

ஜூன் 18, 2019 915

வாஷிங்டன் (18 ஜூன் 2019): அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில், சந்திரசேகர், 44, என்ற இந்தியர், அங்குள்ள நிறுவனம் ஒன்றில், கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்தார்.

சந்திரசேகர், அவர் மனைவி லாவண்யா, 41, அவர்களின், 15 மற்றும் 10 வயது மகன்கள், அவர்களது வீட்டில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு, இறந்து கிடந்துள்ளனர். அதைப் பார்த்த சிலர், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து, நால்வர் உடல்களையும் அப்புறப்படுத்தி, விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து அதே வீட்டில் தங்கியிருந்த அவர்களது விருந்தினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...