பார்ப்பவர்களை நெகிழ வைத்த சம்பவம் - நான்கு வயது சிறுவனை அழுது கொண்டே தூக்கிச் செல்லும் காவலர்!

ஜூன் 18, 2019 435

ஜம்மு (18 ஜூன் 2019): காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கொல்லப் பட்ட சிஆர்பிஎப் அதிகாரி அர்ஷத் கானின் மகனை சக காவலர் அழுது கொண்டே தூக்கிச் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் அனாந்னாங் மாவட்டத்தில் சிஆர்பிஎப் குழு மீது கடந்த புதன் கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதில் ஒருவர் அர்ஷத்கான் எனும் காவலர். அர்ஷத் கானுக்கு இந்த தாக்குதலின்போது பலத்த காயம் ஏற்பட்டது அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அப்போது அவரின் உடல் அருகே விளையாடிக் கொண்டு இருந்த அர்ஷத்தின் நான்கு வயது மகன் உஹ்பானை அங்கிருந்த மூத்த காவல் அதிகாரி ஒருவர், அந்த குழந்தையை அழுதுக் கொண்டே தூக்கிச் சென்றார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை நெகிழ வைத்துக் கொண்டிருக்கிறது.

அர்ஷத் 2002ம் ஆண்டு மாநிலத்தின் காவலராக தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக அவர் சதார் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக இருந்தது குறிப்பிடத்தகக்து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...