பதவியேற்பில் அசர வைத்த அசாதுத்தீன் உவைசி!

ஜூன் 18, 2019 897

புதுடெல்லி (18 ஜூன் 2019): மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்பு இன்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனல் பறந்தது.

தமிழக எம்பிக்கள் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என்ற கோஷத்துடன் பதவியேற்ற நிலையில், ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி பதவியேற்றபோது பரபரப்பு கூடியது.அவர் எழுந்து வர தொடங்கியதுமே பாஜக எம்.பிக்கள் ”ஜெய்ஸ்ரீ ராம்” என கூச்சலிட தொடங்கினர். தொடர்ந்து அவர் மேடைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு சாசனத்தை வாசிக்கும் வரை “ஜெய்ஸ்ரீ ராம்” முழக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

பதவி பிரமாண வாசகங்களை படித்து முடித்ததும் இறுதியாக ”ஜெய் பீம், அல்லாஹ் ஹு அக்பர், ஜெய் பாரத்” என கூறி பாஜகவினரின் கூச்சலுக்கு சரமாரி பதிலடி கொடுத்து அசர வைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...