உடலுறவுக்கு அழைத்த சாமியார் - மறுத்த பெண் கணவனால் படுகொலை!

ஜூன் 19, 2019 634

லக்னோ (19 ஜூன் 2019): சாமியாருடன் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவர் மற்றும் சாமியார் கைது செய்யப் பட்டுள்ளனர்.

உ.பி மாநிலம் அலிகாட் பகுதியை சேர்ந்தவர் மன்பால் என்பவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இவர் பல தொழில் செய்தும் பெரியதாக சம்பாதிக்க முடியவில்லை. இவர் செய்த அத்தனை தொழிற்களும் நஷ்டத்தில் தான் முடிந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த இவர் சாமியர் ஒருவரை சந்தித்து தனது பிரச்னைகளை சொல்லி தீர்வு கேட்டுள்ளார். அதற்கு அந்த சாமியார் மன்பாலிற்கு தோஷம் இருப்பதாகவும் அதற்கு மன்பால் தனது மனைவியை அந்த சாமியாருடன் உடலுறவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நதிக்கரையோரம் பூஜைகள் நடத்தி இந்த நிகழ்வை செய்ய வேண்டும் என்றும், இரவு தான் இந்த பூஜை நடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனக்கு அதிஷ்டம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மன்பாலும் இதற்க்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, மன்பாலும் தனது மனைவியிடம் உடலுறவு பற்றி கூறாமல் நாம் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு பரிகார பூஜை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, மனைவி மற்றும் மகனை இரவு சாமியார் சொன்ன நதிக்கரைக்கு கூட்டி சென்றுள்ளார்.

பூஜை நடக்கும் இடத்திற்கு சென்றவுடன் மன்பால் தனது மனைவியிடம் சாமியாருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற தகவலை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மன்பாலின் மனைவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மன்பால் தனது மனைவியுடன் விவாதம் செய்து கொண்டே தண்ணீரில் முழ்கடித்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, அவர் ஊர் மக்களிடம் தன் மனைவி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து, அந்த பெண்ணின் தம்பி காவல்துறையில் தனது அக்காவின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, காவலதுறையினர் விசாரணையின் போது அவர்கள் நடத்திய நாடகம் அம்பலமானது. இதை தொடர்ந்து மன்பால் மற்றும் அந்த சாமியாரை கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...