இப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்!

ஜூன் 20, 2019 472

ஐதராபாத் (20 ஜூன் 2019): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு, 6 அடி உயரமுள்ள சிலையை தனது வீட்டின் முன்பு வைத்து தெலங்கானா இளைஞர் ஒருவர் பூஜை செய்து வருகிறார்.

தெலங்கானா மாநிலம் ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்த பூஸ்சா கிருஷ்ணா என்னும் இளைஞர் தனது வீட்டின் முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு சிலை வைத்துள்ளார். 6 அடி உயரம் கொண்ட டிரம்ப் சிலைக்கு நாள்தோறும் இந்த இளைஞர் பூஜை செய்து வருகிறார்.

கடந்த 14-ம் தேதி டிரம்ப் பிறந்த நாளையொட்டி, பால் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதனிடையே இந்தியாவில் பல்வேறு தேசிய தலைவர்களுக்கு சிலைகள் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிலைக்கு இளைஞர் கிருஷ்ணா தினந்தோறும் பூஜை செய்து வருவது எதற்காக என்று தெரியாமல் அப்பகுதியில் உள்ள மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய கிருஷ்ணா, "டிரம்ப்பை எனக்கு பிடிக்கும். அதனால்தான் அவருக்கு சிலை வைத்துள்ளேன். அவருக்கு தினமும் பூஜைகளும் செய்வேன்" என கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...