குஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை!

ஜூன் 20, 2019 556

ஜாம்நகர் (20 ஜூன் 2019): 30 ஆண்டுகள் முன்பு நட்ந்த சம்பவம் குறித்த வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்-க்கு ஆயுள் தண்டனை விதித்து ஜாம்நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், 2002 கோத்ரா கலவரத்துக்கு முதல்வராக இருந்த மோடி தான் காரணம். இந்துக்கள் கோபத்தில் இருக்கின்றனர்; அவர்களது வன்முறையை தடுக்க வேண்டாம் என முதல்வராக இருந்த மோடி, காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுப்பியவர் சஞ்சீவ் பட்.

ஆனால், சஞ்சீவ் பட்டின் இந்த குற்றச்சாட்டை விசாரித்த நீதிமன்றங்கள் அனைத்து வழக்கிலிருந்தும் மோடியை விடுவித்து உத்தரவிட்டது.

மோடியை எதிர்த்ததற்காக , பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இன்னல்களை சந்தித்தார். 2012 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடியை எதிர்த்து மணிநகர் தொகுதியில் சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதாவை போட்டியிட வைத்தார். இதன் பின்ன 2015 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்தே சஞ்சீவ் பட் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் 1989 ஆம் ஆண்டு ஜாம்நகரில் பணியாற்றிய போது கலவரத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை சஞ்சீவ் பட் கைது செய்து சிறையில் அடைத்தார். அவர்களில் ஒருவர் விடுதலைக்குப் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த மரணத்துக்கு காரணமே சஞ்சீவ் பட்தான் என வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் 30 ஆண்டுகள் கழித்து ஜாம்நகர் நீதிமன்றம் சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...