முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது!

ஜூன் 21, 2019 331

புதுடெல்லி (21 ஜூன் 2019): முத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கலானது.

முஸ்லிம் பெண்களுக்கு கணவன்மார்களால் உடனடி மூன்று தலாக் (விவாகரத்து) முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கடந்த பாஜக ஆட்சியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் பாஜக அரசுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் அச்சட்டம் நிறைவேறாமல் இருந்தது. கடந்த 16-வது நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததால் அச்சட்ட மசோதாவும் காலாவதியானது.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாகவே தற்போது மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

கடும் அமளி, எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் தடுப்பு மசோதாவை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இந்த மசோதா தாக்கலானபோது எதிர்கட்சிகள் அமலியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...