வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் அவசரக் கடிதம்!

ஜூன் 21, 2019 544

கொல்கத்தா (21 ஜூன் 2019): வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ்லிம் தலைவர்கள் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 82 வயது சயீத் என்ற முதியவர் மரணமடைந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் என்.ஆர்.எஸ். மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர்கள், பணியாளர்களை கொடூரமாகத் தாக்கினர். இதனால்தான் நாடு தழுவிய அளவு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர மேற்கு வங்கத்தில் ஆங்காங்கே வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னணியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ஈடுபட்ட நிலையில் முஸ்லிம்கள் மீதும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் என கொல்கத்தாவைச் சேர்ந்த முஸ்லிம் கல்வியாளர்கள் இம்ரான் ஜாகி, மமூம் அக்தர், சமூக செயற்பாட்டாளர் முதார் பதேர்யா உள்ளிட்ட 53 பிரமுகர்கள், மமதா பானர்ஜிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், "முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் என நிரூபிக்கப் பட்டால் சட்டத்தின் முன் பாராபட்சமின்றி நடவடிக்கை எடுங்கள்." என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...