அஸ்ஸாம் பர்பேத்தா பகுதியில் ஆட்டோவில் சென்ற சிறுபான்மை இனத்தவர்கள் சிலரை வழிமறித்த ஒரு கும்பல் அவர்களிடம் 'ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் முர்தாபாத்' என்று கூறச் சொல்லி வலியுறுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மீது தாக்குதலையும் அந்த கும்பல் அரங்கேற்றியுள்ளது. அதனை வீடியோவாக எடுத்த அந்த கும்பல் அதனை சமூக வலைதளங்களிலும் பரவ விட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப் பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.