முத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து!

ஜூன் 21, 2019 534

புதுடெல்லி (21 ஜூன் 2019): முத்தலாக் விவகாரத்தில் எங்கள் கட்சி திருக்குர்ஆனில் கூறப்பட்டதை வைத்தே முடிவெடுக்க ஆதரவு தெரிவிக்கும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி அசாம்கான் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசாம்கான், "பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் மற்ற மதங்களை விட இஸ்லாம் முதன்மையானது. தலாக் விவகாரத்தில் குர்ஆன் எதை வலியுறுத்துகிறதோ அதுவே எங்கள் கட்சியின் நிலைப்பாடும். திருகுர்ஆன், திருமணம், விவாகரத்து, குடும்ப வாழ்வு என எல்லா விவகாரங்களையும் தெளிவாக விளக்கியுள்ளது. முத்தலாக் விவகாரத்தை வைத்து மத விவகாரங்களில் தலையிடுவதும், அதனை அரசியலாக்குவதும் ஏற்புடையது அல்ல." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...