மத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவிப்பு!

ஜூன் 23, 2019 608

பாட்னா (23 ஜூன் 2019): பாஜக எம்.எல்.ஏ மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 15,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என பீகார் மக்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பீகாரில் தண்ணீர் பஞ்சம் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தவித்து வருகின்றார். ஹுட்ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.

இந்நிலையில் பீகார் நிலவரம் குறித்து உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. மூளைக் காய்ச்சலால் கடந்த 2 வாரத்தில் மட்டும் 176 குழந்தைகள் பலியாகியுள்ளனர். குழந்தைகள் இந்த தொடர் மரணத்தால் மக்கள் அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

மக்களைவைத் தேர்தலுக்கு பிறகு அந்த பகுதி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பா.ஜ.க அமைச்சர்கள் யாரும் வந்து மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என தகவல் வெளிவந்துள்ளது.

பீகாரில் குழந்தைகள் மரணம், குடிக்க தண்ணீர் இல்லை, மக்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஹரிவன்ஷ்பூர் பகுதி கிராம மக்கள் நேற்றைய தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் முதல் நாள் போராட்டத்தின் போது அறிவிப்பு பலகை வைத்து போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் கையில் ஏந்திய அறிவிப்பு பலகையில், "எங்கள் பகுதி எம்.எல்.ஏ-க்களைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, ரூ.5000மும், எம்.பி மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, ரூ.15,000மும் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்" என்று அறிவிப்புகை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் பா.ஜ.க மற்றும் பீகார் மாநில அரசுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...