மழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்!

ஜூன் 23, 2019 419

அகோலா (23 ஜூன் 2019): மகாராஷ்ட்ரிராவில் மழையின்போது மொபைல் போனில் மின்னல் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவை சேர்ந்த அபிஜீத் ஸ்ரீ கிருஷ்ணா என்ற 22 வயது இளைஞர் மொபைல் போனில் அவரது நண்பருடன் பேசிக் கொன்டிருந்தார். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்துள்ளது. மேலும் அப்போது மின்னல் தாக்கியுள்ளது. அது மொபைல் போன் வழியாக இளைஞரை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேபோல இன்னொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...