பெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி!

ஜூன் 23, 2019 989

பெங்களூரு (23 ஜூன் 2019): பெங்களூரில் உள்ள மோடி மசூதியின் உண்மை பின்னணி தெரியாமல் அது பிரதமர் மோடியின் பெயரால் உள்ள மசூதி என பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

பிரதமராக மோடி 2014 ல் பதவியேற்ற நாளில் இருந்தே பொய்யான தகவல்கள் பரப்பப் பட்டு வருகின்றன. அதில் ஒன்று பிரதமர் மோடியின் பெயரால் உள்ள மசூதி. ஆனால் உண்மையில் அந்த மசூதி கட்டப் பட்டு 170 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் பிரதமர் மோடிக்கு வயது 69 மட்டுமே. என்கிறார் அந்த மசூதியின் தலைமை இமாம் குலாம் ரப்பானி.

175 வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் அப்துல் கபூர் மோடி என்பவரால் கட்டப் பட்ட மசூதி இந்த மசூதி, அப்துல் கபூரின் பெயருடன் ஒட்டியுள்ள மோடி என்பதை சுட்டி மோடி மசூதி என பெயரிட்டுள்ளனர்.

தற்போது அந்த மசூதி புதுப்பிக்கப் பட்டு புதிதாக தோற்றமளிப்பதோடு அதில் குறிப்பிட்டுள்ள மோடி மசூதி என்பதை சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். ஆனால் அதில் ஒரு இடத்தில் கூட நரேந்திர மோடி என்று இல்லை என்பதை கூட அறியாதவர்கள் இவர்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...