ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை!

ஜூன் 23, 2019 878

புதுடெல்லி (23 ஜுன் 2019): ஜார்கண்டில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது தபாரெஜ் அன்சாரி என்பவரை திருட்டு குற்றம் சாட்டி சில கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளது. அதில் ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி அந்த கும்பல் அவரை வலியுறுத்தி கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சமூக வலைதளங்களில் அந்த வீடியோவும் பரவியது.

சுமார் 18 மணிநேரங்களுக்குப் பிறகு கடும் காயத்துடன் போலீசில் ஒப்படைக்கப் பட்ட தபாரெஜ் அன்சாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி ஷிஷ்தா பர்வீன் கூறுகையில், " கொலைகார கும்பலால் கடும் தாக்குதலுக்கு உள்ளான என் என் கணவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை அதுவும் என் கணவர் மரணத்திற்கு கரணம்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெறும் ஜார்கண்டில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...