இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா!

ஜூன் 24, 2019 291

புதுடெல்லி (24 ஜூன் 2019): இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

அண்மையில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். அவருக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையேயான கருத்து மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்த விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிய 6 மாதங்கள் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...