காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்?

ஜூன் 24, 2019 374

புதுடெல்லி (24 ஜூன் 2019): காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அதனை ஏற்கவில்லை. எனினும் ராஜினாமாவில் ராகுல் காந்தி முடிவாக உள்ளார்.

இந்தநிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெல்லாட் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று செய்திகள் வெளிவருகின்றன. அசோக் கெல்லாட்டைத் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு, சோனியா காந்தி உள்ளிட்டவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக அசோக் கெல்லாட் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், ராஜஸ்தான் மாநில முதல்வராக தற்போதைய துணை முதல் சச்சின் பைலட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...