தொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

ஜூன் 25, 2019 288

காசியாபாத் (25 ஜூன் 2019): தொடர் உடல்நலக் குறைவு காரணமாக சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான முலாயம்சிங் யாதவ், காசியாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பாக முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்த மாத துவக்கத்திலும் முலாயம் சிங் யாதவ் குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...