அகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்!

ஜூன் 25, 2019 341

லக்னோ (25 ஜூன் 2019): சமாஜ்வாதி கட்சி கூட்டணியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.

இனிவருகிற அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்த்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தன. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மாயாவதி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதையடுத்து, இனிவருகிற அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...