ஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்? ராகுல் காந்தி கேள்வி

ஜூன் 26, 2019 620

புதுடெல்லி (26 ஜூன் 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் 24 வயது தபிரெஸ் அன்சாரி என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் 24 வயது தபிரெஸ் அன்சாரி என்ற இளைஞனை ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் அனுமான் எனக் கூறும் படி கட்டாயப்படுத்தி ஒரு கும்பல் அடித்து உதைத்துள்ளது. பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “ஜார்கண்ட் சம்பவம் மனித குலத்துக்கு ஏற்பட்ட கறை. இறந்த வாலிபரின் உடலை 4 நாட்க தங்கள் கட்டுப்பாட்டில் போலீஸார் மறைத்து வைத்திருந்தது கொடுமையானது” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது. அதன் பிறகும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா தலைவர்கள் மவுனம் காப்பது ஏன்? என்று தெரியவில்லை. மவுனம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இறந்த இளைஞனின் மனைவி “ எனக்கு யாரும் இல்லை, என் கணவர் மட்டுமே எனக்கு ஒரே ஆதரவு. எனக்கு நீதி வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...