ரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்!

ஜூன் 26, 2019 297

புதுடெல்லி (26 ஜூன் 2019): இந்திய ரா அமைப்பு மற்றும் புலாய்வு அமைப்பின் தலைவர்களை மாற்றி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அந்நாட்டின் உளவு அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் இந்தியாவில், ஐ.பி, ரா என இரண்டு உளவு அமைப்புகள் பணியாற்றி வருகின்றன.

ஐ.பி எனப்படும் இன்டலிஜன்ஸ் பீரோ அமைப்பு உள்நாட்டு உளவு தகவல்களை சேகரிக்கிறது. ரா அமைப்பு மற்ற நாடுகளின் நடவடிக்கைகளை சேகரிக்கிறது. இந்தியாவின் மிக உயர்ந்த அமைப்புகளான இந்த இரண்டு அமைப்புகளுக்கும் பிரதமர் மோடி தலைவர்களை நியமித்துள்ளார். ஐ.பி அமைப்புக்கு அரவிந்த் குமார் என்பவர் இயக்குநராகவும், ரா அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் செயல்பட உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...