முஸ்லிம் இளைஞர் கொலையில் மூளையாக செயல் பட்ட பாஜக பிரமுகர் கைது!

ஜூன் 27, 2019 651

புதுடெல்லி (27 ஜூன் 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லை அடித்துக் கொலை செய்யப் பட்ட தஃபாரெஸ் அன்சாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது தபாரெஜ் அன்சாரி என்பவரை சில கும்பல் அவரை கடுமையாக தாக்கியது. மேலும் ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி அந்த கும்பல் அவரை வலியுறுத்தி கடும் தாக்குதலை மேற்கொண்டது. சமூக வலைதளங்களில் அந்த வீடியோவும் பரவியது.

சுமார் 18 மணிநேரங்களுக்குப் பிறகு கடும் காயத்துடன் போலீசில் ஒப்படைக்கப் பட்ட தபாரெஜ் அன்சாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக முக்கிய குற்றவாளியும் பாஜக பிரமுகருமான பப்பு மெண்டால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே உயிரிழந்த தஃபாரெஜ் அன்சாரியின் மனைவி, "என் கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழக்க நேரிட்டது" என்று போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...