ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் மயங்கிய நிலையில் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்!

ஜூன் 27, 2019 309

லஹேர் (27 ஜூன் 2019): ஜார்கண்டில் ஆம்புலன்ஸ் மறுக்கப் பட்டதால் கடுமையான வலியுடன் கர்ப்பிணிப் பெண் மயங்கிய நிலையில் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனை சென்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டின் லதேஹாரில், ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல வேண்டு நிலை ஏற்பட்டது. ஆனால் ஒரு ஆம்புலன்ஸ் கூட உதவிக்கு வரவில்லை. மயக்க நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சைக்காக, கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல மோட்டார் சைக்கிளை நாட வேண்டியிருந்தது. இதற்காக, அந்தப்பெண் 10 கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய வேண்டி இருந்தது.

லதேஹர் சதர் மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு எல்லா வசதியும் இருந்த , லதேஹர் சதர் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வில்லை. மேலும் அந்த பெண்ணை ராஞ்சி மருத்துவமனை செல்ல வலியுறுத்தியுள்ளனர்.

அந்த பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், நடக்கக் கூட முடியவில்லை. அந்த பெண் வலியால் துடித்துள்ளார். அப்பொழுது கூட ஆம்புலன்ஸ் வழங்கப்பட வில்லை. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...