நாடாளுமன்றத்தை மிரள வைத்த பெண் எம்.பி!

ஜூன் 28, 2019 615

புதுடெல்லி (28 ஜூன் 2019): நாடெங்கும் இவர்தான் ஹாட் டாப்பிக். ஆம், மேற்கு வங்கத்தின் பெண் சிங்கம் என வர்ணிக்கப்படும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, இவர் ஆற்றிய உரை எந்த அளவுக்கு உண்மை என்பதையும், மக்களை அதிக அளவில் சிந்திக்க வைத்துள்ளது.

இவர் எழுப்பிய ஏழு முக்கிய கேள்விகள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. அவையாவன:

இந்திய அரசியல் சாசன சட்டத்தை முழுவதுமாக மதிப்போம் என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்றுள்ளோம் ஆனால் அதனை மதிக்கிறோமா?

எங்களின் இந்திய நாட்டை மதவெறியர்கள் நாடாக மாற்றி ஒவ்வொருவரையும் படுகொலை செய்ய அனுமதிப்பதற்கு இவர்கள் யார் ? பெஹ்லுக்கான் படுகொலை முதல் முதல் அன்சாரி வரை இது தொடர்கிறது. ஆனால் இதற்கு முடிவு இல்லை.

எங்களின் இந்திய நாட்டை இருண்ட காலத்தை நோக்கி பின்னோக்கி இழுத்து செல்ல ஒரு ஆட்சி தேவையா ?

பல ஆயிரம் வருடங்களாக இந்திய மண்ணிலே வாழும் இந்தியர்களை தாங்கள் இந்தியர்கள் தான் என்று நிரூபிக்க ஒரு துண்டு சீட்டை காட்டி தான் நாங்கள் இந்தியர்கள் என்று நிரூபிக்க வேண்டுமா ?

மத்திய அமைச்சர்களாக உள்ளவர்கள் பலர் தான் பட்டதாரிகள் தான் என்று நிருபிக்க இன்று வரை ஒரு ஒரிஜினல் சர்டிபிகேட்டை காட்ட முடியாதவர்கள் , எந்த கல்லூரியில் இருந்து படித்து பட்டம் பெற்றார்கள் என்று நிரூபிக்க முடியாதவர்கள், இந்தியாவில் பிறந்து வளர்ந்து வரும் இந்தியர்களை பார்த்து நீங்கள் அனைவரும் இந்தியர்கள் தான் என்று நிரூபியுங்கள் என்று கேட்கிறார்கள் ?

இந்திய நாட்டையும் மதத்தையும் ஒன்றாக கலந்து எங்கள் நாட்டை மத வெறியர்கள் நாடாக மாற்றுவதை நாங்கள் வேடிக்கை பார்க வேண்டுமா ? மத ஸ்லோகங்கள்தான் நாட்டின் அடையாளமா? இந்திய அரசியல் சாசன சட்டத்தில் அப்படி எதுவும் கூறப்பட்டுள்ளதா? தேச பக்தியை நிரூபிக்க அப்படி ஏதாவது குறிப்பிட்ட சுலோக வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று எந்த சட்ட புத்தகத்தில் குறிப்பிட பட்டுள்ளது ??

இவ்வாறு மஹுவா மொய்த்ரா எழுப்பிய கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...