தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் - மேலும் ஒரு இளைஞர் அடித்துக் கொலை!

ஜூலை 05, 2019 762

கொல்கத்தா (05 ஜூலை 2019): மேற்கு வங்கத்தில் முஸ்லிம் இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

நாடெங்கும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மேற்கு வங்கம் பைஸ்னாப்நகர் பஜார் என்ற பகுதியில் 20 வயது சனாஉல்லாஹ் சேக் என்பவர், ஐந்து பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

இரு சாக்கர வாகனம் திருடியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்திய அந்த கும்பல் சேக்கை கடுமையாக தாக்கியுள்ளது. படுகாயங்களுடன் பர்தாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சேக் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா கொண்டு செல்லப் பட்டார். அங்கு sskm மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சேக் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...