மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

ஜூலை 05, 2019 256

புதுடெல்லி (05 ஜூலை 2019): மத்திய பட்ஜெட் 2019 இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், நம் நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்ய நடவடிக்கை மற்றும் வணிகம், விமான போக்குவரத்து துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு புதிய சீர்த்திருத்தம் கொண்டு வரப்படும். பிரதம மந்திரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 1.9 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்.

2022 ஆம் ஆண்டிற்குள் 1.90 கோடி வீடுகளில் மக்கள் குடியேறுவார்கள் .

சாகர் மாலா மற்றும் பாரத் மாலா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐந்து ஆண்டுகளில் ரூபாய் 80,250 கோடியில் சுமார் 1,25,000 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்படும். 50 ஆயிரம் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை. 75 ஆயிரம் தொழில் முனைவோருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும்.

ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...