மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம்!

ஜூலை 05, 2019 1103

புதுடெல்லி (05 ஜூலை 2019): மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

மாட்டுக்கறிக்காக பல இடங்களில் படுகொலைகள், தாக்குதல்கள் அரங்கேறிய போதும் இந்தியா மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

U.S. Department of Agriculture (USDA) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் இந்தியாதான் மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. அதுவும் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்குப் பிறகு, முன்பை விட மாட்டுக்கறி ஏற்றுமதி 3 சதவீதம் அதிகரித்துள்ளது. என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...