நெருக்கடி காரணமாக ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி தாக்குதலில் ஈடுபட்டவர் கைது!

ஜூலை 07, 2019 623

கவுஹாத்தி (07 ஜூலை 2019): முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி தாக்குதலில் ஈடுபட்டவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

அஸ்ஸாம் பர்பேத்தா பகுதியில் ஆட்டோவில் சென்ற சிறுபான்மை இனத்தவர்கள் சிலரை வழிமறித்த ஒரு கும்பல் அவர்களிடம் 'ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் முர்தாபாத்' என்று கூறச் சொல்லி வலியுறுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மீது தாக்குதலையும் அந்த கும்பல் அரங்கேற்றியது. அதனை வீடியோவாக எடுத்த அந்த கும்பல் அதனை சமூக வலைதளங்களிலும் பரவ விட்டது.

இதுகுறித்து பாதிக்கப் பட்ட முஸ்லிம்கள் புகார் அளித்தும், போலீஸ் இதில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் முஸ்லிம்களின் தொடர் அழுத்தம் காரணமாக சம்பவம் நடந்து 2 வாரம் கழித்து தாக்குதல் நடத்திய குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...