சிறுமி கூட்டு வன்புணர்வு - முஸ்லிம்கள் மீது அவதூறு!

ஜூலை 08, 2019 798

லக்னோ (08 ஜூலை 2019): சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப் பட்ட வீடியோ ஒன்றை பதிந்து இதற்கு காரணம் முஸ்லிம்கள்தான் என்று தவறாக பரப்புரை செய்துள்ளார் ஒருவர்.

உத்திர பிரதேசம் ஜஃபராபாத்தில் குஷி சிங் என்பவர் ஒரு வீடியோ பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார். அது இருவர் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வது போன்ற வீடியோவாகும். இதனை பதிந்த குஷி சிங், அந்த சிறுமியை வன்புணர்வு செய்பவர்கள் முஸ்லிம்கள்தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் போலீசார் இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்ததில், கல்லு மற்றும் சத்து ஆகிய இருவர்தான் இதனை செய்தனர் என்பதை உறுதி செய்தனர். மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான பதிவுகள் பதியப் பட்டு வருகிறமை அதிகரித்து வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...