தலைகுப்புற விழுந்த பேருந்து - 29 பேர் பலி!

ஜூலை 08, 2019 360

லக்னோ (08 ஜூலை 2019): உபியில் ஏற்பட்ட கோர பேருந்து விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அவாத் டிப்போவைச் சேர்ந்த டபுள் டக்கர் பேருந்து, இன்று காலை லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் அருகிலுள்ள கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த நபர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...