உண்மை பேசினால் சிறைத் தண்டனை - ஸ்வேதா பட்!

ஜூலை 09, 2019 365

புதுடெல்லி (09 ஜூலை 2019) இன்று என் கணவர் சஞ்சீவ் பட் நாளை நீங்களும் சிறை செல்லலாம் என்று ஸ்வேதா பட் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாம்நகர் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. போலீஸ் காவலில் விசாரணைக் கைதி ஒருவர் மரணம் அடைந்த வழக்கில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப் பட்டது.

சஞ்சீவ் பட் 2002 குஜராத் கலவரத்தில் மோடி, அமித்ஷாவின் கூட்டு திட்டத்தை அம்பலப் படுத்தியதால் அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா பட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், " என் கணவர் நானாவதி கமிஷன் முன்பு உண்மையை பேசியதால் இந்த பரிசு வழங்கப் பட்டுள்ளது. இன்று அவர் சிறையில் உள்ளார். நாளை நீங்களும் சிறை செல்லலாம். அதுதான் இந்த அரசின் வேலை. என் கணவர் நிரபராதி, அவர் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்." என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...