குழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவன்!

ஜூலை 10, 2019 324

போபால் (10 ஜூலை 2019): கை குழந்தையுடன் ஆற்றில் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

அஸாம் மாநிலம் சோனிட்பூர் பகுதியில் இருக்கும் பிரம்மபுத்திராவின் கிளை ஆறு ஒன்றை பெண்ணும் அவரது குழந்தையும் கடக்க முயன்றனர். அப்போது, மழை பெய்து இருந்ததால் ஆற்றில் திடீரென்று தண்ணீரின் அளவு அதிகரித்தது.

இதனால், அப்பெண் தனது குழந்தையுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த சிறுவன் உத்தம் டாட்டி, தண்ணீரில் குதித்து அப்பெண் மற்றும் அவரது குழந்தையையும் காப்பாற்றினான். இச்சிறுவனின் வீரதீர செயலை தேசிய அளவில் அங்கீகரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்த பட்டுள்ளதாக அம்மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் துணிச்சலான இந்த செயல் அங்குள்ள மக்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிறுவனின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...