தபாரெஜ் அன்சாரி படுகொலை வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

ஜூலை 10, 2019 447

ராஞ்சி (10 ஜூலை 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் தபாரெஜ் அன்சாரி ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி படுகொலை செய்யப் பட்ட வழக்கில் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது ராஞ்சி நீதிமன்றம்.

ஜார்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் 24 வயது தபாரெஜ் அன்சாரி என்ற இளைஞரை சில பயங்கரவாத கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் அவரை ஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி அந்த கும்பல் அவரை வலியுறுத்தி கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சமூக வலைதளங்களில் அந்த வீடியோவும் பரவியது.

சுமார் 18 மணிநேரங்களுக்குப் பிறகு கடும் காயத்துடன் போலீசில் ஒப்படைக்கப் பட்ட தபாரெஜ் அன்சாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இச்சம்பவத்தை கண்டித்து எதிர் கட்சிகள் குரல் எழுப்பின.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் ராஞ்சி நீதிமன்றம் அரசிடம் அறிக்கை கோரியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேரை ஜார்கண்ட் போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...