திருமணத்திற்கு முன் எச்ஐவி பரிசோதனை - அமுலாகும் புதிய சட்டம்!

ஜூலை 10, 2019 270

கோவா (10 ஜூலை 2019): கோவாவில் திருமண பதிவுக்கு முன் தம்பதிகள் எச்ஐவி பரிசோதனை செய்யும் புதிய சட்டம் அமுலாகவுள்ளது.

இதுகுறித்து கோவா சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோவாவில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு தம்பதிகளுக்கு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்

2006 ஆம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு இதேபோன்ற சட்டத்தை முன்மொழிந்தது, பிறகு அது கைவிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...