இளம் பெண் கூட்டு வன்புணர்வு - ஐந்து பேர் மீது வழக்கு!

ஜூலை 10, 2019 332

மங்களூரு (10 ஜூலை 2019): கர்நாடக மாநிலம் மங்களூரில் 17 வயது இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு பயின்றுவிட்டு வீட்டில் இருந்த இளம் பெண்ணை ஐந்து பேர் தொடர்ந்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் அந்த பெண் ஆறு மாத கர்ப்பிணியாகவும் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி அந்த ஐந்து பேரும் தொடர்ந்து வன்புணர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் பெண் கர்ப்பமானதை அடுத்து விஷயம் வெளியில் தெரிந்துள்ளது. இதை அடுத்து ஐந்து பேர் மீது போலீசில் பெண் சார்பில் புகார் அளிக்கப் பட்டு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...