கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்!

ஜூலை 11, 2019 452

பெங்களூரு (11 ஜூலை 2019): கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

கர்நாடக அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், தனது முதல்வர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே கூட்டணி எம்.எல்.ஏக்கள் அதிருப்திய்ல் உள்ளனர். இந்நிலையில் சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவியை ஒதுக்கி, முதல்வர் குமாரசாமி அதிரடி காட்டினார். இருப்பினும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த முடியவில்லை. இந்த சூழலில் மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.

ஆனால் அவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இது இப்படியிருக்க மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.

இதன் காரணமாக ஆளும் மஜத - காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை குறைந்தது. இதை சுட்டிக் காட்டி முதல்வர் குமாரசாமியை ராஜினாமா செய்யுமாறு, பாஜக எம்.எல்.ஏக்கள் கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகைய களேபரங்களைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், தனது ராஜினாமா முடிவை குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...