மதரஸா மாணவர்கள் மீது இந்துத்வா பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்!

ஜூலை 12, 2019 477

உன்னாவோ (12 ஜூலை 2019): உத்திர பிரதேசம் உன்னாவோ பகுதியில் இந்துத்வா பயங்கரவாத கும்பல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த மதரஸா மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.

நாடெங்கும் ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் நேற்று மதராஸா பள்ளியின் (இஸ்லாமிய கல்வி கற்றுக்கொடுக்கப்படும் இடம்) ஜிஐசி விளையாட்டு மைதானத்தில் அப்பள்ளி மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது வலதுசாரி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அந்த சிறுவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டனர். பின்னர் அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை கூற சொல்லி கிரிக்கெட் பேட்டால் தாக்கினர். அவர்களிடமிருந்து தப்பித்து மதராஸா மாணவர்கள் ஓட முயன்ற போது, அவர்கள் மீது கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். இதில் அவர்களில் உடைகள் கிழந்தன, மேலும் அவர்களில் ஒருவரின் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதல் காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதராஸா பள்ளி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...