கோவாவில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!

ஜூலை 12, 2019 333

கோவா (12 ஜூலை 2019): கோவாவில் காங்கிரசில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் சமீபத்தில் பதவி விலகினர். அவர்கள் அனைவரையும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் 10 பேரும் பாஜகவில் இணைந்தனர்.

தற்போது 10 எம்எல்ஏக்கள் இணைந்ததன் மூலம், கோவா சட்டமன்றத்தில் பாஜகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக இணைந்துள்ள எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...