பாகிஸ்தான் உளவாளிக்கு ராணுவ ரகசியங்களை விற்ற இந்திய ராணுவ வீரர் கைது!

ஜூலை 13, 2019 494

புதுடெல்லி (13 ஜூலை 2019): பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு இந்திய ராணுவ ரகசியங்களை பகிர்ந்த இந்திய ராணுவ அதிகாரி கைது செய்யப் பட்டுள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள நர்நௌல் ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் ரவீந்தர் என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ராணுவத்தின் மிக முக்கியமான ரகசியங்களை, சமூக வலைதளத்தில் தொடர்பில் இருந்த பெண்ணுடன் பகிர்ந்து கொண்டதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர் கொடுத்த தகவலுக்கு அப்பெண்ணிடம் இருந்து குறிப்பிட்ட தொகை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...